அம்மாடியோவ்! ஒரு ஜோடி ஆடு ரூ.1.30 லட்சம்!

 
அம்மாடியோவ்! ஒரு ஜோடி ஆடு ரூ.1.30 லட்சம்!


வேலூர் மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சந்தை கே.வி.குப்பம் சந்தை. இந்த சந்தைக்கு அருகில் உள்ள கிராமங்கள் மட்டுமல்ல உள்ளூர் மற்றும் சித்தூர், பலமநேர் போன்ற ஆந்திர மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
சாதாரணமாகவே இந்த சந்தை பரபரப்பாக இருக்கும் என்றாலும் விழாக்காலங்களில் மேலும் களை கட்டும் நாளை பக்ரீத் தினம் என்பதால் அதிகாலையில் இருந்தேவிற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

அம்மாடியோவ்! ஒரு ஜோடி ஆடு ரூ.1.30 லட்சம்!


வேலூர் மாவட்டத்தில் அதிகமாக விற்பனையாகும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளுடன் அதிக எடைகொண்ட ‘நெல்லூர் ஒயிட்’ வகை ஆடுகள் பக்ரீத் பண்டிகைக்காகவே அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்ன. இந்த வகை ஆடுகள் ஒரு ஜோடி நெல்லூர் ஒயிட் ஆட்டின் விலை ரூ 1,40,000.- வரை விலை போனது.
இது குறித்து இந்த வகை ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தவர் ‘‘சித்தூர் மாவட்டத்தில் இருந்து இந்த சந்தைக்காக வந்திருக்கிறேன்.

அம்மாடியோவ்! ஒரு ஜோடி ஆடு ரூ.1.30 லட்சம்!

நெல்லூர் ஒயிட் வகையில் 70 ஆடுகளை பெரும்பாலும் வீட்டுக்கே வந்து ஆடுகளை வாங்கிச் சென்று விட்டார்கள். 10 கிடாக்களை இந்த சந்தைக்கு கொண்டு வந்து ஜோடி ரூ ரூ.1,20,000/-க்கு விற்றுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகை காரணமாக நேற்று ஒரே நாளில் கே.வி.குப்பம் ஆட்டுக் கிடா சந்தையில் சுமார் ரூ.50,00,000/க்கு வியாபாரம் நடைபெற்றிருக்கும் எனத் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web