பேருந்தில் ப்ரேக் பிடிக்கல ... கீழே குதித்த அமர்நாத் யாத்ரீகர்கள்... ஷாக் வீடியோ!

 
பேருந்தில் இருந்து குதித்த பயணிகள்
 

 

ஆன்மிக சுற்றுலாவாக பல பகுதிகளில் இருந்தும் யாத்ரீகர்கள் அமர்நாத்துக்கு பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது திடீரென பேருந்தில் ப்ரேக் பிடிக்கவில்லை. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறி கூச்சலிட்டனர். அமர்நாத்திலிருந்து 40 பயணிகள் ஏற்றிக்கொண்டு ஹோஷியார்பூருக்கு பேருந்து ஒன்று சென்றது.ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த அந்த  பேருந்தில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை.  

இதனால் 40 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. முயற்சியில் யாத்ரீகர்கள் நகரும் பேருந்தில் இருந்து வேகமாக குதிக்கத் தொடங்கினார்கள். கீழே விழுந்தவர்களுக்கு சின்ன சின்ன காயங்களும் ஏற்பட்டன.  பேருந்தில் பலரும் இருந்தபடியால்  நிற்காமல் மெதுவாக பள்ளத்தாக்கை நோக்கி சென்றது.அதே நேரத்தில் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.  இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் உடனடி நடவடிக்கை காரணமாக  பேருந்து சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் சிக்காமல் தடுக்கப்பட்டது.

பிரேக் செயலிழந்ததால் பேருந்தை  கட்டுப்படுத்த முடியாமல் நாச்லானா, பனிஹால் அருகே வாகனத்தை நிறுத்த டிரைவர் சிரமப்பட்டனர்.  பாதுகாப்புப் பணியாளர்கள்  பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் கற்களை வைத்து பேருந்தை நிறுத்தினார்கள். இச்சம்பவத்தில் 6 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயம அடைந்தனர்.  இராணுவம்  ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த அனைவருக்கும் மருத்துவ உதவி மற்றும் முதலுதவி அளித்தது. இது குறித்த  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web