பகீர் வீடியோ... கும்பமேளாவில் திடீரென பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…‌ 3 வது முறையாக தீவிபத்து... அச்சத்தில் பக்தர்கள்!

 
ஆம்புலன்ஸ்
 


 

உத்திரப்பிரதேச மாநிலத்தில்  பிரயாக்ராஜ்  மகா கும்பமேளா நடைபெறுகிறது.  மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் நிலையில் திரிவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கானோர் புனித நீராடியதாக தெரிகிறது.   இன்று தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு லட்சக்கணக்கான பயணிகள் குவிந்து வருகின்றனர்.   இதனால் நள்ளிரவில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.

அதன்பிறகு பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருவதால்  தற்காலிகமாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் திரிவேணி சங்கமத்துக்கு பக்தர்கள் வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கங்கையில் புனிதநீராட அறிவுறுத்தியுள்ளார்.

நடந்தது என்ன? மகா கும்பமேளா கூட்ட நெரிசலும், உயிரிழப்புகளும்... முழு தகவல்கள்!
இந்நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் தற்போது திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக துரிதமாக செயல்பட்டு அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைத்தனர். மேலும் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் 2  முறை தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது 3 வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web