வாகன ஓட்டிகளே உஷார்... ஆம்புலன்சுக்கு வழி விடலன்னா 6 மாசத்துக்கு லைசன்ஸ் கேன்சல்... !

 
ambulance ambulance

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க அம்மாநில மோட்டார் போக்குவரத்து துறை தற்பொழுது புதிய முடிவை எடுத்துள்ளது.

இதன்படி அவசரக் காலத்தில் நோயாளிகளுடன் செல்லும் ஆம்புலன்சு வாகனங்களுக்கு வழிவிட மறுக்கும் வாகன ஓட்டிகளின் உரிமம் 6 மாதங்களுக்கு அதிரடியாக முடக்கப்படும். மேலும் அவர்கள் மோட்டார் போக்குவரத்து துறையின் ஒரு நாள் கட்டாய பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க வேண்டும். இதேபோல் தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கப்படும்.

அதிவேகமாகவோ அல்லது மதுபோதையிலோ வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 1 வருடத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், 5 நாட்கள் கட்டாய பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கடுமையான விதிமுறைகளை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருமாறு அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.