10 நாளில் 60 மலைப்பாம்புகள்... அமெரிக்க பாம்புபிடிப் போட்டியில் முதல் பெண் சாம்பியன்... வைரல் வீடியோ!

 
சீனா

 

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் நடைபெற்ற வருடாந்திர பாம்புபிடிப் போட்டியில் 29 வயது பெண் ஒருவர் வெறும் 10 நாட்களில் 60 பர்மிய மலைப்பாம்புகளைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் வரலாற்றில் முதலிடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமையை டெய்லர் ஸ்டான்பெரி பெற்றுள்ளார்.

தெற்கு புளோரிடாவின் மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சதுப்பு நிலங்களில் வெறுங்காலுடன் நடந்து சென்று வெறும் கைகளாலேயே அவர் 60 மலைப்பாம்புகளைப் பிடித்துள்ளார். இதில் 33 பெண் பாம்புகளும் 27 ஆண் பாம்புகளும் அடங்கும்.

இந்தச் சாதனைக்காக அவருக்கு 10,000 அமெரிக்க டாலர் முதல் பரிசு வழங்கப்பட்டது. புளோரிடாவின் பூர்வீக உயிரினங்களையும் இயற்கைச் சூழலையும் பாதுகாக்கவே இந்தப் பணியில் ஈடுபடுவதாக டெய்லர் தெரிவித்துள்ளார்.