அமெரிக்காவில் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு... பலர் பலியானதாக அச்சம்!

 
america

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவலл்கள் வெளியாகியுள்ளன. வணிக வளாகம் நிறைந்த பரபரப்பான பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பலரும் காயமடைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த அவசரகால மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Twin Falls police confirm multiple fatalities in Idaho In-N-Out shooting | Fox News

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுச் சூழ்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் தொடரும் இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.