17 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய அமெரிக்க நடிகர் சார்லஸ் போர்ட்டர் காலமானார்!

 
போர்ட்டர்

 

அமெரிக்க நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சார்லஸ் எஃப். போர்ட்டர் (47), புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். கடந்த நவம்பர் 2-ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு வெளியான ‘வெண்டெல் ஸ்காட்: ஏ ரேஸ் ஸ்டோரி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் சார்லஸ் போர்ட்டர் கவனம் பெற்றார். ‘தி பார்க்கர்ஸ்’, ‘வித்அவுட் எ டிரேஸ்’, ‘போன்ஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். ‘ஃபைண்டிங் ஃபெய்த்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

அவர் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாட்ஜ்கின் லிம்போமா எனப்படும் ஒருவகை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Charles Porter Dead: 'Finding Faith' Producer & Actor Was 47

அவரது மறைவு குறித்து மனைவி கேண்டிஸ் டாப்-போர்ட்டர் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். 18 ஆண்டுகால தங்களது வாழ்க்கைப் பயணத்தையும், கணவரின் நேர்மை, உறுதிப்பாடு மற்றும் வாழ்க்கையை நேசித்த விதத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.சார்லஸ் போர்ட்டருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.