ஒரே ஆண்டில் 1,207 திரைப்படங்கள்! திரையரங்கில் படம் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

 
கின்னஸ்

 

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே ஆண்டில் திரையரங்குகளில் 1,207 திரைப்படங்களைப் பார்த்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.கிளென்வுட் ஹோஸ்கின் என்ற அந்த இளைஞர், திரைப்படங்களைத் திரையரங்கில் முழுமையாகப் பார்ப்பதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

குறிப்பாக, படம் பார்க்கும் நேரத்தில் செல்போன் உள்ளிட்ட கவனச்சிதறல்களுக்கு இடமளிக்காமல், ஒவ்வொரு திரைப்படத்தையும் முழுமையாகப் பார்த்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இதில் இடம்பெற்றிருந்தது.இதற்கு முன்பு, சாக் சுவோப் என்பவர் ஓராண்டில் 777 திரைப்படங்களைத் திரையரங்குகளில் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது 1,207 திரைப்படங்களைப் பார்த்துள்ள கிளென்வுட் ஹோஸ்கின், அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

இதையடுத்து, அவரது சாதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்களைத் தொடர்ந்து திரையரங்கில் பார்ப்பதற்காக அவர் செலவிட்ட நேரமும், கடைப்பிடித்த ஒழுங்கும் இந்தச் சாதனையைப் பலரது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.