அமித் ஷா தலைமையில் இன்று கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
இம்மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்க, மாநாட்டைத் தொகுத்து நடத்தும் தமிழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துணைத் தலைவராகச் செயல்படுகிறார்.

இம்மாநாட்டில் ஆந்திர முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர், கேரள முதலமைச்சர், தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா (முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளதால்) மற்றும் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகள், நதிநீர் விவகாரங்கள் (மேகதாட்டு அணை & காவேரி நீர் பங்கீடு), கடலோரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்துச் சுமார் 4 மணி நேரம் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
