ஆக.9ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா... ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் வழிபாடு!

 
அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாகப் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார்.

ஆகஸ்ட் 9 (அரசு விழா) புதுச்சேரி காவல் துறைக்குப் குடியரசுத் தலைவரின் சிறப்பு வண்ணக் கொடி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஆகஸ்ட் 9 (திருவண்ணாமலை பயணம்) புதுச்சேரி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அன்றைய தினமே தமிழகத்தின் திருவண்ணாமலைக்கு வருகிறார்.

அமித்ஷா

திருவண்ணாமலையில் உள்ள பகவான் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்று வழிபாடு நடத்துகிறார். அமைச்சரின் வருகையை முன்னிட்டுத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், ரமண ஆசிரமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.