33 ஆண்டுகளுக்கு பின் இணையும் அமிதாப் - ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியில் திகைக்கும் சூப்பர் ஸ்டார்..!!

 
ரஜினிகாந்த் அமிதாப் பச்சன்

'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆரம்பமானது. பின் தூத்துக்குடி, திருநெல்வேலி
பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.அதில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த்தும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். 


அமிதாப்புடன் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “லைக்காவின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில், தலைவர் 170 படத்தில், 33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி, அமிதாப்புடன் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது," என அமிதாப்புடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

இதுவரை பார்த்திராத மிரட்டலான புதிய லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்..


ரஜினிகாந்த், அமிதாப் இருவரும் ஹிந்தியில் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இருவரும் இணைந்து கடைசியாக நடித்த ஹிந்திப் படம் 'ஹம்'. அப்படம் தான் தமிழில் 'பாட்ஷா'வாக ரீமேக் ஆனது. ரஜினியின் 170வது படத்தில் அமிதாப் தவிர மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது.

From around the web