டெல்லி – பாட்னா இடையே 22 பெட்டிகளுடன் புதிய அமிர்த் பாரத் 3.0 ரயில்… !

 
அம்ரித்

 

இந்திய ரயில்வேயின் புதிய தலைமுறை அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் 3.0 ரயில், டெல்லி – பாட்னா இடையே சத் பூஜை சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு டெல்லியில் இருந்து பாட்னாவுக்குப் புறப்பட்ட இந்த ரயில், பயணிகளின் வசதிக்காக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன. இதில் முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளுடன் ஸ்லீப்பர் மற்றும் பொதுப் பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

என்னென்ன வசதிகள்?

மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், சிறந்த சஸ்பென்ஷன் வசதி, நவீன கழிப்பறைகள், செல்போன் சார்ஜிங் வசதிகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், புஷ்-புல் தொழில்நுட்பம் மூலம் வேகமாகப் புறப்படவும், பயணத்தை சீராக மேற்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

India's first Amrit Bharat Express 3.0 with AC coaches launched on Delhi- Patna route to ease Chhath Puja rush | India News - The Indian Express

சாதாரண மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பயணிகளுக்கு மலிவு கட்டணத்தில் மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்குவதே அமிர்த் பாரத் ரயில்களின் நோக்கமாகும். சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு டெல்லி – பீகார் இடையிலான பயணிகள் நெரிசலைக் குறைக்க இந்தச் சிறப்பு சேவை இயக்கப்பட்டுள்ளது.