கல்லூரி மாணவர் படுகொலை விவகாரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது!

 
amuthan

 

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டி அருகே பழிக்குப்பழியாக கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரவிந்த், சிவரோகித், மணிபாலா, ஆறஅமுதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களை விரைவில் கைது செய்வதற்காக பல்வேறு இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மாணவர்களிடையே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்களை பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தமிழக சட்டப்பேரவையில் இன்று கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.