பகீர்!! ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 மாத குழந்தை !!

 
ஆழ்துளை கிணறு

எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட போதிலும் ஆழ்துளை கிணற்றில்தவறி விழுந்தவர்களை மீட்கும் இயந்திரங்கள் இன்னும் கண்டறியப்படவே இல்லை. மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் ஆழ்துளை கிணறுகள் , மோட்டார்கள்போட்டு விட்டு தண்ணீர் இல்லையெனில் அப்படியே விட்டு விடக்கூடாது. அந்த குழிகளை தக்க பாதுகாப்புடன் உடனடியாக மூடிவிட வேண்டும் என பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் அதையெல்லாம்யாரும் கண்டு கொள்வதே இல்லை. 

ஆழ்துளைக்கிணறு

ஏதோ ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமைய காரணமாகி விடும் என சுயசிந்தனையுடன் செயல்படுவதே கிடையாது. இதனாலேயே ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளின் எண்ணிக்கையும், பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையும் தொடர்கதையாகி வருகிறது. 

ஆழ்துளை கிணறு

மத்தியப் பிரதேசத்தில்   விடிஷா மாவட்டத்தில்  அருகில் உள்ள கிராமத்தில் ஆழ்துளைகிணற்றில் 18 மாத பெண் குழந்தை இன்று காலை  தவறி விழுந்துவிட்டது.இந்த சோகசம்பவம் மாவட்ட தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கஜாரி பார்கேடா கிராமத்தில்  நிகழ்ந்துள்ளது.  இந்த குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது  ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாகத்  தகவல்கள்வெளியாகியுள்ளன. தகவலின் பேரில் விரைந்து வந்து மாவட்டத்தின் பொறுப்பாளர் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர்   விஸ்வாஸ் சரங் மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என   அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையைத் துரித படுத்தியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web