பழிவாங்கும் நடவடிக்கை.. நாதக கார்த்திகா கைதுக்கு டிடிவி தினகரன் பாய்ச்சல்!
Oct 20, 2026, 13:40 IST
தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று டிடிவி தினகரன் சாடியுள்ளார். எதிர்க்கட்சியினரைப் போலியாய் முடக்கிச் சிறையில் அடைப்பதற்கு மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தும் போக்கு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவெக அரசின் இந்தத் தொடர்ச்சியான ஜனநாயக விரோதச் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும், கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகா உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
