’என் சொந்தக்காரரிடம் எப்படி வரி வசூலிப்பாய்’.. நகராட்சி அலுவலரை அலற விட்ட பெண் கவுன்சிலர்!

 
லதா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட காய்கறி மார்க்கெட் பகுதியில் 30வது வார்டு திமுக கவுன்சிலர் லதாவின் உறவினர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நகராட்சி கமிஷனர் மற்றும் ஊழியர்கள் வரி பாக்கியை வசூலிக்க சென்றுள்ளனர். அப்போது, ​​நகராட்சி அதிகாரிகளுக்கும், கடைக்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற நிலையில் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து  வருவதை தடுக்க முடியாமல் தடுமாறும் சிதம்பரம் நகராட்சி ...

அப்போது, ​​''உரிய வரி பாக்கியை செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீரை நிறுத்துவோம்,'' என அதிகாரிகள் எச்சரித்ததாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்த 30வது வார்டு திமுக கவுன்சிலர் லதா, நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

திமுக கவுன்சிலர்

இரவில் அங்கு சென்ற அவர், 'மார்க்கெட் பகுதிக்கு சென்று, உறவினரிடம் எப்படி வரி வசூலிப்பது' என, நகராட்சி கமிஷனர் மற்றும் ஊழியர்களிடம் கடுமையாக பேசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிதம்பரம் நகராட்சி தற்போது திமுக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்