இறுதி போட்டியில் இந்தியா 65 ரன்களில் ஆல் அவுட்.. 6 மாதத்திற்கு முன்பே கணித்த ஆஸ்திரேலிய வீரர்..!!

 
மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா 65 ரன்னில் ஆல் அவுட் ஆகும் என ஆஸ்திரேலிய வீரர் கணித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவில் நேற்று  நடந்த இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா  உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 213 ரன்கள் இலக்கை 16 பந்துகள் மீதமிருக்க, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தனது 3-வது லீக் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தியா தனது கடைசி போட்டியையும் இந்த மைதானத்தில் விளையாட உள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் பல கோடி இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

அத்தகைய சூழ்நிலையில், மிட்செல் மார்ஷ் இறுதிப்போட்டியில் வெறும் 65 ரன்களில் இந்தியாவை ஆல் அவுட் ஆக்கி ஆஸ்திரேலிய கோப்பையை கைப்பற்றும் என கூறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மார்ஷ் விளையாடினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் கடந்த மே மாதம் உரிமையாளருடனான பாட்காஸ்டில் பேசினார்.

India vs Australia World Cup Final Match Prediction- Who Will Win Today ODI  Match 2023?

அப்போது உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் முடிவு கணிப்பை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த மார்ஷ் இந்தியாவை அபாரமாக  வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று கூறியிருந்தார். அதன்படி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மோதும் என்றும் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்து 450 எடுக்கும். இந்தியா 65 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகும்” என்று  ஒரு நகைச்சுவையாக  கூறினார்.

தற்போது ஆஸ்திரேலிய மிட்செல் மார்ஷின் இந்த கணிப்பு எந்த அளவுக்கு உண்மை என்பது நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தான் தெரியவரும். ஆனால், மிட்செல் மார்ஷின் இந்த கணிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web