இதப் பார்றா!! ஆட்டோவில் சவாரி செய்தா தக்காளி இலவசம்!!

 
தக்காளி ஆட்டோ

இந்தியாவின் வட பகுதிகளில் பருவமழை தொடங்கியிருப்பதால் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தக்காளி விலை ரூ.100க்கும்  அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   இதனால் நடுத்தரமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தக்காளியை பயன்படுத்தி நகைச்சுவையான விளம்பரங்களும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.   

ஆட்டோ தக்காளி


இந்நிலையில், பஞ்சாபின் சண்டிகரில்   ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கி வருகிறார். ஆனால் நிபந்தனைகளுடன். சண்டிகரில் உள்ள இந்த ஆட்டோ ஓட்டுநர் அருண் தனது ஆட்டோவில் சவாரி செய்யும் அனைவருக்கும் ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். ஆனால்  5  சவாரி செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். இது குறித்து  ஆட்டோ டிரைவர் அருண் ”  ஆட்டோ தான் எனது வருமான ஆதாரம் மற்றும் எனது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரே வழி.

தக்காளி ஆட்டோ

ஆனால் இலவச தக்காளி சேவைகளை வழங்குவதன் மூலம்  எனக்கு மிகுந்த திருப்தி ஏற்படுகிறது. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில்  இந்தியா வெற்றி பெற்றால், சண்டிகரில்  5  நாட்களுக்கு இலவச ரிக்ஷா சவாரி வழங்குவேன்.ஆட்டோ டிரைவர் அருண் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர்களுக்கு இலவச ஆட்டோ ரிக்க்ஷா சவாரி வழங்கி வருகிறார். அத்துடன்  கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவமனைகளுக்கு இலவச போக்குவரத்து சேவையையும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!