வைரல் வீடியோ... ஜப்பான் சாலையில் திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட முதியவர்... !

 
முதியவர்

ஜப்பானில் சைதமா மாகாணத்தில்  யஷியோ நகர் பகுதியில் ஜனவரி 28ம் தேதி சாலையின் நடுவே திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. அந்த சாலையில் வந்து கொண்டிருந்த லாரி அந்த பள்ளத்தினுள் கவிழ்ந்தது. இதில், அந்த லாரியை ஓட்டி வந்த 74 வயதுடைய முதியவர் அந்த பள்ளத்தினுள் சிக்கிக் கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அந்நாட்டு மீட்புப் படையினர் அன்று முதல் முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சாலையின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர் குழாய் பழுதாகி இருப்பதினால்  இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், அந்த லாரியின் பின்பாகத்தை மீட்புப் படையினர் அந்த பள்ளத்திலிருந்து வெளியே எடுத்துள்ளனர். முதியவர் அமர்ந்திருந்த ஓட்டுநர் பகுதி பள்ளதிலுள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளதால் அவரை மீட்பது தொடர்ந்து சிரமமாகியுள்ளது.
ஜனவரி 28ம் தேதி  சுமார் 33 அடி அகலத்தில் 5 மீட்டர் ஆழத்திற்கு உண்டான இந்த பள்ளத்தினுள் கழிவு நீர் குழாய் உடைந்து அந்த தண்ணீர் நிரம்பி இன்று ஜனவரி 30ம் தேதி மற்றொரு புதிய பள்ளம் தோன்றியுள்ளது. அதன் பின்னர் இரண்டு பள்ளங்களும் ஒன்றிணைந்து சுமார் 20 மீட்டர் அகலத்திற்கு மிகப்பெரிய பள்ளமாக உருவாகியுள்ளது. 

பள்ளம்
இந்த மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ள சாலையின் அடியில் எரிவாயு குழாய்களும் அமைக்கப்பட்டிருப்பதினால், பாதுகாப்பு கருதி அப்பகுதியிலுள்ள 200 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  அப்பகுதி மக்களுக்கு தண்ணீரை குறைந்த அளவில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 28ம் தேதி மீட்புப் படையினரின் குரலுக்கு பதிலளித்த முதியவரின் நிலைக்குறித்து அதன்பின்னர் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.  ஜப்பானின் சாலைகளின் அடியில் அமைந்துள்ள கழிவு நீர் குழாய்கள் பாழடைந்து வருவதினால் அந்நாட்டு சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகின்றது.
2024 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியா நாட்டில் கோலாலம்பூர் நகரத்தின் சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினுள் விஜயலட்சுமி கலி எனும் இந்தியப் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.  சுமார் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்த அவரை மீட்கும் பணி பாதுகாப்பு காரணங்களால் பின்னர் கைவிடப்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web