ஜாமீன் குடுங்க... அன்பில் மகேஷ் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்... வழக்கறிஞர்கள் அதிரடி வாதம்!

 
அன்பில் மகேஷ்

 

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன் வைத்துள்ளனர்.

அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்த ஊழல் புகாரில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்கள், ஏற்கெனவே போலீஸ் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டனர். விசாரணையின்போது 200-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், தேவையான ஆவணங்களையும் வழங்கியுள்ளதாக வாதிட்டனர்.

அன்பில் மகேஷ்

மேலும், அன்பில் மகேஷ் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார் என்றும், சாட்சிகளை கலைக்கவோ ஆதாரங்களை அழிக்கவோ வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.

அவர் பணம் கேட்டதாகவோ, பெற்றதாகவோ இதுவரை என்ன ஆதாரம் உள்ளது என்றும் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.