ரயில் பயணிகளே உஷார்... ஒரே நாளில் ரூ7லட்சம் அபராதம் வசூல்... !!

'எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் ரயில் நிலையத்தில் பிரமாண்ட டிக்கெட் பரிசோதனை நடப்பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று மேற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் அந்தேரி ரயில்வே ஸ்டேஷனில் 'டிக்கெட் சோதனை'யின் போது டிக்கெட் இல்லாமல் பயணித்த 2,693 பயணிகளைப் பிடித்து ரூ. 7.14 லட்சம் அபாராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. இதுவே இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் அதிகமான ஒரு நாள் அபராத வசூல்.
முன்னதாக ஒரு மூத்த மேற்கு ரயில்வே அதிகாரி , அந்தேரியில் தினமும் 120-150 குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று கூறினார், அதன்படி அந்தேரி டிக்கெட் சோதனையின் போது, அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் டிக்கெட்-சோதகர்கள் அதிரடியாக நிறுத்தி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 199 டிக்கெட் சோதனை செய்பவர்கள் வரவழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைப் போல் தாதர் ரயில்வே ஸ்டேஷனில் 1,647 டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து ஒரே நாளில் ரூ.4.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.