முரசு புயலில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்து... தமிழக மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு!

 
முரசு

 

ஆந்திரா அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாயமான தமிழக மீனவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகதி படகு கவிழ்ச்சி: துனிசியா கடலில் 13 பேர் மாயம், 2 பேர் மீட்பு. Refugee Boat Capsize: 13 Feared Dead, 2 Rescued off Tunisia Coast

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி 9 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் ராமாயப்பட்டணம் துறைமுகத்தை நோக்கிச் சென்றபோது, நவம்பர் 2-ம் தேதி முரசு புயலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.இதனால் விசைப்படகின் என்ஜின் பழுதடைந்து, கடலில் தத்தளித்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விபத்தில் மாயமான 9 மீனவர்களையும் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் கடற்கரையில் 3 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. மற்றொரு மீனவரின் உடல் தேடுதல் பணியின்போது மீட்கப்பட்டது.

முரசு' புயல் தீவிரமடைந்தது – மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களும் ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன