ஆந்திராவில் பக்தர்கள் மீது கார் மோதி விபத்து... 4 பேர் பலி!
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் கதிபுடியில் பக்தர்கள் மீது ஸ்கார்பியோ கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tragic Accident in Kakinada District.. Four Bhavani Devotees Dead A horrific road accident on National Highway-16 near Kathipudi in Shankavaram Mandal, #Kakinada District #AndhraPradesh Bus carrying Bhavani malas from #Vizianagaram district to #Vijayawada Bus that had stopped for repairs Scorpio car rams into devotees who had gone to the roadside to have tea Four killed on the spot in the accident.. Another injured All deceased identified as residents of Denkaada village, Vizianagaram district Police arrive at the scene and begin investigation
— Siraj Noorani (@sirajnoorani) October 22, 2026
விஜயநகரம் மாவட்டம் டெங்கடாவிலிருந்து விஜயவாடா நோக்கிப் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பேருந்திலிருந்து கீழே இறங்கிய பக்தர்கள், சாலையோரத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், பக்தர்கள் மீது மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
