ஆந்திரா செல்கிறார் முதல்வர் விஜய்.. நாளை சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை சந்திக்கத் திட்டம்!

 
விஜய்சந்திரபாபு சந்திரபாபுவிஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லவுள்ளார். அங்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதிநீர் பற்றாக்குறை குறித்தும், தமிழகத்திற்குத் தடையின்றி நீர் வழங்குவது தொடர்பாக ஆந்திரத் தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் விவாதிக்கவுள்ளார்.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயவாடாவில் நடைபெறும் 'விஜயவாடா உத்ஸவ் 2.0' விழாவில் கலந்துகொள்ள உள்ள முதன்முறையாக ஆந்திரா செல்லவுள்ள முதலமைச்சர் விஜய், அங்குள்ள முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.