நாடு முழுவதும் அதிர்ச்சி.. காதலியுடன் உல்லாசம்... தகராறில் கொலை செய்து, ஸ்லைஸ் போட்டு ஃபிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர்! தலை இன்னும் கிடைக்கவில்லை!

 
காதலி பிரிட்ஜுக்குள் ஆந்திரா காதலி பிரிட்ஜுக்குள் ஆந்திரா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை ஊழியர் ஒருவர், தனது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைச் சிதைத்து, துண்டு துண்டாக ஸ்லைஸ் போட்டு பிரிட்ஜூக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படையில் பணியாற்றி வரும் ரவீந்திரா என்பவருக்கும், மௌனிகா என்ற இளம் பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. ரவீந்திராவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். ரவீந்திராவின் மனைவி தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவர், மௌனிகாவைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே  உல்லாசத்தின் போது ஏற்பட்ட தகராறில், மௌனிகாவை ரவீந்திரா கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கொலையை மறைக்க எண்ணிய ரவீந்திரா, மௌனிகாவின் உடலைச் சிறிய துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

கள்ளக்காதல்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரவீந்திரா அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியைத் தந்துளது. மௌனிகா தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அடிக்கடி பணத்திற்காகத் தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தொல்லையிலிருந்து விடுபடவே அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

கைது செய்யப்பட்ட ரவீந்திரா அளித்த தகவலின் பேரில், அவரது வீட்டில் இருந்த உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். எனினும், கொல்லப்பட்ட மௌனிகாவின் தலைப் பகுதி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனை அவர் எங்கே வீசினார் என்பது குறித்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் டெல்லியில் நடந்த 'ஷ்ரத்தா வாக்கர்' கொலை வழக்கினை நினைவுபடுத்துவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.