பள்ளி மாணவியை ரம்பத்தால் தாக்கிய வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட இளைஞரின் வலது கால் அகற்றம்!

 
ரம்பம்

 

ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞரின் வலது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

Ashish on X: "Andhra Chainsaw attack accused's leg amputated. Doctors at Anantapur Government General Hospital have amputated the right leg of Hemanth, the accused in the brutal chainsaw attack on two Class

அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி இந்தத் தாக்குதல் நடந்தது. வகுப்பறைக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் என்ற இளைஞர், மாணவி கோபிகாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு மாணவியும் காயமடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய ஹேமந்தை, ஆத்மக்கூர் வனப்பகுதியில் போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது காவல் ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறி, போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இரு கால்களிலும் காயம் ஏற்பட்டது.

Hemanth: Andhra chainsaw attacker's leg amputated; victim girl taken off ventilator

அனந்தபூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு திசுக்கள் சேதமடைந்ததால், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து காலை அகற்றினர். இடது காலிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்த மாணவி கோபிகாவின் உடல்நிலையும் முன்னேற்றம் அடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.