ஆந்திர பள்ளிக்குள் நுழைந்து மாணவி மீது செயின்சா தாக்குதல்! மற்றொரு மாணவியும் காயம்

 
ஆந்திரா

 

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 10-ம் வகுப்பு மாணவி மீது செயின்சா எனப்படும் மரம் அறுக்கும் இயந்திரத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராப்பாடு பகுதியில் உள்ள அரசு ஜில்லா பரிஷத் பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வகுப்பறைக்குள் நுழைந்த நபர், அங்கிருந்த 15 வயது மாணவியை இயந்திரத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், வலது கையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Chainsaw horror inside Andhra school: Class 10 girl fights for life after man cuts her face over rejected love proposal | Amaravati News - The Times of India

மாணவியைத் தாக்குவதைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவியும் காயமடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பிரதானமாகத் தாக்கப்பட்ட மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரம் அறுக்கும் இயந்திரத்தால் 10ம் வகுப்பு மாணவி மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபர் எவ்வாறு உள்ளே நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. சந்தேக நபரைப் போலீசார் பிடித்துள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்ததுடன், மாணவிக்கு உயர் தர சிகிச்சை அளிக்கவும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.