காதல் தோல்வியால் ஆத்திரம்... வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது!

 
வந்தே பாரத் கற்கள் கல் வந்தே பாரத் கற்கள் கல்

சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய 22 வயது இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை வந்தே பாரத் ரயில் விழுப்புரம் மற்றும் தச்சூர் இடையே கடந்து சென்றபோது, மர்ம நபர் வீசிய கல்லால் ரயிலின் சி-4 (C-4) பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல்வீச்சு நடந்த இடத்தைக் கொண்டு ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த விக்கி (22) என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்த போது, அவர் ரயிலின் மீது கல்வீசியதை ஒப்புக்கொண்டார்.

வந்தே பாரத்

ரயில்வே போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞர் கூறிய திடுக்கிடு செய்தது. அவர் காதலித்து வந்த பெண் சமீபத்தில் அவரைப் பிரிந்துச் சென்றதால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளவும், கவனத்தை ஈர்க்கவும் அங்குக் கடந்து சென்ற அதிவேக ரயிலின் மீது கல்வீசியதாகத் தெரிவித்துள்ளார்.

காதல்

ரயில்வே சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.