செல்போனை உடைத்ததால் ஆத்திரம்... தந்தையைக் குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற மகள்!

 
கொலை இளம்பெண் மகள்

குஜராத் மாநிலம் சூரத்தில் செல்போனை உடைத்த கடுப்பில் தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த மகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சூரத் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சவுகான் (55) என்பவரது மகள் காஜல் (22), எப்போதும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். மகளின் இந்த வழக்கத்தை பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த தந்தை ரமேஷ் சவுகான், காஜலின் செல்போனைப் பிடுங்கி உடைத்துள்ளார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

போன் உடைந்த ஆத்திரத்தில் கட்டுப்பாட்டை இழந்த காஜல், வீட்டில் இருந்த பிரஷர் குக்கர் மூடி மற்றும் சமையலறை கத்தியை எடுத்துத் தந்தை ரமேஷை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சவுகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை படுகொலை வெட்டிக்கொலை

தகவலறிந்து வந்த போலீசார், ரமேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையைக் கொலை செய்த காஜல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரைக் கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.