வேறு ஒருவருடன் நடனமாடியதால் ஆத்திரம்... காதலியை வெட்டிக்கொன்று விட்டு காதலனும் தற்கொலை!

 
காதலி கொலை தற்கொலை இளம்பெண்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், விநாயகர் ஊர்வலத்தில் வேறு ஒரு இளைஞருடன் நடனமாடியதைக் கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், காதலியைத் தேங்காய் வெட்டும் கத்தியால் வெட்டிக் கொன்று விட்டு, காதலனும் கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மகாலட்சுமி (19) என்பவரும், சின்ன ராவு (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சமீபத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, மகாலட்சுமி வேறு ஒரு இளைஞருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதைக் கண்ட சின்ன ராவுக்குக் கடுமையான ஆத்திரமும் பொறாமையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மகாலட்சுமியிடம் அவர் தகராறு செய்துள்ள நிலையில், அதன் பின்னர் மகாலட்சுமி அவரைச் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சின்ன ராவு, தேங்காய் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு மகாலட்சுமியின் வீட்டிற்குச் சென்று அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு, அதே கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துத் சின்ன ராவும் தற்கொலை செய்து கொண்டார். ஒரே விவகாரத்தில் காதலியும் காதலனும் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.