காதல் கணவரைப் பிரித்ததால் ஆத்திரம்... இளம்பெண் மீது சாணத்தை ஊற்றி தாக்குதல் நடத்திய இன்ஸ்டா பிரபலம்!

 
இன்ஸ்டா இளம்பெண் காதல் சாணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதியான அபிநயா - கவியரசன் பிரிவுக்குக் காரணமானவர் என்று கூறி, இளம்பெண் ஒருவரை வழிமறித்துத் துடைப்பத்தால் தாக்கிச் சாணம் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் தம்பதிகளான அபிநயா மற்றும் கவியரசன் என்பவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துள்ளனர். இவர்களின் பிரிவுக்கு 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் தான் காரணம் என்று அபிநயா தரப்பு சந்தேகப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

இந்நிலையில் அந்தப் பெண்ணை வழிமறித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அபிநயா, தனது சகோதரி மற்றும் தோழியுடன் சேர்ந்து அவரைத் துடைப்பத்தால் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பெண் மீது சாணத்தைக் கரைத்து ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

புதுமணப்பெண் மாப்பிள்ளை ஜோடி திருமணம் இளம்பெண் காதல் கல்யாணம் ரிஷப்சன்

இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் அபிநயா உட்பட 3 பெண்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.