திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்... இளம்பெண் மீது ஆசிட் வீசிய மணமகன்!

 
மணப்பெண் காதலி ஆசிட்

உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தை திடீரென நிறுத்தியதால், ஆத்திரத்தில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் இளம்பெண் மற்றும் அவரது சகோதரி மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், சிம்பாவலி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஹர்ஷ் பாட்டி போதைக்கு அடிமையானவர் என்பதைத் குடும்பத்தினர் பின்னர் அறிந்ததால், அந்தப் பெண்ணின் வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர்.

காதலை ஏற்க மறுப்பு!!அக்கா , தங்கை இருவர் மீதும் ஆசிட் வீச்சு!!பதைபதைக்கும் வாக்குமூலம்!!

இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷ் பாட்டி, நேராக அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். கதவைத் திறந்தவுடன் தனது முன்னாள் வருங்கால மனைவி மீது அவர் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற அப்பெண்ணின் சகோதரி மீதும் ஆசிட் வீசப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்ப உறுப்பினர்கள், தப்பிக்க முயன்ற ஹர்ஷ் பாட்டியை மடக்கிப் பிடித்தனர். இது குறித்துத் தகவலறிந்த சிம்பாவலி காவல் நிலையக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரைக் கைது செய்தனர்.

ஆசிட்

படுகாயமடைந்த இரண்டு சகோதரிகளும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.