பேருந்தில் இலவச டிக்கெட் கேட்டதால் ஆத்திரம்.. பெண்ணை சரமாரியாக தாக்கிய நடத்துனர்!

 
பேருந்து சண்டை

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் மாநகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சி அமல்படுத்தியது.

இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், கர்நாடக அரசு வழங்கிய அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம்) ஏதேனும் ஒன்றை நடத்துனரிடம் காட்டி இலவச பயணச் சீட்டைப் பெறலாம். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரு பிலக்கலி பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் தஞ்சிலா இஸ்மாயில் என்ற இளம்பெண் ஏறினார். பெண் நடத்துனரிடம் டிக்கெட் கேட்டபோது, கண்டக்டர் டிக்கெட் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

அப்போது நடத்துனர்"ஆதார் கார்டு கொடுங்கள்" என்று கேட்டார். இரண்டு நிறுத்தங்களைக் கடந்ததும் அந்த இளம்பெண் மீண்டும் பயண சீட்டைக் கேட்டாள். அப்போது நடத்துனர் மீண்டும்  ஆதார் அட்டையை காட்டி இலவச பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் பணம் செலுத்தி பயணச்சீட்டு எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு கண்டக்டரின் கன்னத்தில் அவர் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்டக்டர் அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web