மரம் ஏறி பழம் பறிக்காததால் ஆத்திரம்.. 4ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட்!

உத்தரபிரதேச மாநிலம் பிஹாரிபூரை சேர்ந்தவர் போத்ராம். இவரது மனைவி பன்வதி. இவர்களது 9 வயது மகன் பரேலியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 20ம் தேதி சிறுவன் உடலில் காயங்களுடன் வீடு திரும்பினான். இதை கவனித்த சிறுவனின் பெற்றோர் இது குறித்து அவரிடம் கேட்டனர். அப்போது ஆசிரியர் தன்னை தாக்கியதாக சிறுவன் கூறினான்.
இதையடுத்து சிறுவனின் தாய் பன்வதி போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், “ஆசிரியை ராணி கங்வார் எனது மகனை மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால், கதவை பூட்டிவிட்டு வகுப்பறைக்குள் வைத்து 2 மணி நேரம் தாக்கினார் என அழுது கொண்டே என் மகன் சொன்னான். இச்சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்தபோது, சிலர் எங்களை சமரசம் செய்ய முயன்றனர்.
இதற்கு என் கணவரும் சம்மதித்தார். ஆனால் நான் போலீசில் புகார் செய்ய முடிவு செய்தேன். எனது மகனின் காயத்தை மருத்துவர்கள் உறுதி செய்த பிறகே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. என் மகன் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறான். ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர், நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் குழந்தையின் காயங்கள் உறுதிசெய்யப்பட்ட பிறகு, SC/ST சட்டத்தின் பிரிவுகள் 115 (2) மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது உறுதியானது. சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறோம். மற்ற ஊழியர்களிடம் பேசி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்றனர். , குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை ராணி தான் நிரபராதி என்று கூறுகிறார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா