தேர்வில் விடைத்தாளை காட்டாததால் ஆத்திரம்.. மாணவனை கத்தியால் குத்திய சக மாணவர்கள்!

 
தேர்வு

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது விடைத்தாள்களை காட்ட மறுத்த சக மாணவரை 3 மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

“எஸ்எஸ்சி தேர்வின் போது, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களிடம் விடைத்தாளைக் காட்ட மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே வந்த அவரை பிடித்து சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனால் மாணவன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

சிகிச்சையின் பின்னர் குறித்த மாணவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 324 (ஆபத்தான ஆயுதம் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) கீழ் பிவாண்டியில் உள்ள சாந்தி நகர் காவல் நிலையத்தில் சிறார்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர் .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web