திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. இளைஞரை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற பெண்!

 
 நொய்டா பெண்

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவர், 21 வயது இளைஞன் தன்னை  திருமணம் செய்ய மறுத்ததால், அவரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பெண் சமூக வலைதளங்களில் அந்த இளைஞருடன் நட்பு கொண்டிருந்தார்.  இளைஞனை அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து, கூலிப்படையை ஏவி பெண் கொல்ல திட்டமிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட தீரஜ் என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரபுபுரா காவல் நிலைய இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் ராகவேந்திர குமார் சிங் கூறுகையில், ரோனிஜா கிராமத்தில் வசிக்கும் ஒருவர் செவ்வாய்கிழமை இரவு தனது மகன் தீரஜ், பிகாம் மாணவனை, பிரியா என்ற பெண் டிசம்பர் 24 அன்று அழைத்ததாக புகார் அளித்துள்ளார். தீரஜின் தந்தை ஹன்ஸ்ராஜ் மேலும் கூறுகையில், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, அவரது மகனும் பிரியாவும் சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களானார்கள், அதைத் தொடர்ந்து அவர் கிரேட்டர் நொய்டாவுக்கு வந்தார்.

மேலும், அவரது மகன் அந்தப் பெண்ணுடன் காரில் இருந்தபோது, ​​மது குடிக்க வைத்ததாகவும், பின் அவரது நண்பர்கள் இருவர் கூரிய ஆயுதம் மூலம் தீரஜை கொல்ல முயன்றதாக கூறினார். தீரஜ் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யதர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரியா மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய பொறுப்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web