தூங்க இடம் தரலை... ஆத்திரத்தில் ஆட்டோ டிரைவர் கொடூர கொலை!

 
வேளவேந்தன்

தூங்குவதற்கு இடம் தராததால் ஏற்பட்ட தகராறில், மாதவரம் பேருந்து நிலையத்தில்  ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்  ஆட்டோ டிரைவர் வேளவேந்தன் (38). அதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சிவசங்கரன் (47). நேற்றிரவு இருவரும் மது அருந்திவிட்டு மாதவரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து தூங்கச் சென்றனர்.

ஒரு இருக்கை மட்டும் காலியாக இருந்தது. இதனால், 'அந்த இருக்கையில் தூங்குகிறேன்' என, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். வேளவேந்தன் , வேறு வழியின்றி சிவசங்கரனை விட்டு, இருக்கையைப் பிடிக்கப் போராடி, சிறிது தூரத்தில் தரையில் படுத்துக் கொண்டார். இதனால் வேளவேந்தன் மீது சிவசங்கர் கோபமடைந்தார். அதிகாலை 5 மணியளவில் ஒரு பெரிய கல் எடுத்து வந்து வேளவேந்தன் தலையில் போட்டுவிட்டு அங்கு இருந்து தப்பினார்.

இதனால் மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்த வேளவேந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வேலவேந்தன் உயிரிழந்தார். தகவல் அறிந்த மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேளவேந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிவசங்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web