திமுகவில் தீவிரமடையும் மறுசீரமைப்புப் பணிகள் - முக்கியப் பதவிக்குக் காய் நகர்த்தும் அனிதா ராதாகிருஷ்ணன்!

 
அனிதா ராதாகிருஷ்ணன்

திமுகவில் கட்சி ரீதியான மறுசீரமைப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதிய மாவட்டப் பிரிப்புகளால் மூத்த தலைவர்கள் தங்களின் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்

திமுக செயற்குழு கூட்டத் தீர்மானங்களின் அடிப்படையில், தமிழகத்தில் கட்சிக் கட்டமைப்பின் வசதிக்காக மாவட்டங்களின் எண்ணிக்கை 78-லிருந்து 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாற்றங்களின்படி, 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிட்டுள்ளது. இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எஸ். ரகுபதி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி மூத்த தலைவர்களும் அடங்குவர்.

அனிதா ராதாகிருஷ்ணன்

மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சீனியர் தலைவர்கள் தங்களுக்கு இணையான மாற்றுப் பதவிகளைப் பெறத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவின் உயமட்டப் பதவியான துணைப் பொதுச்செயலாளர் பதவியைப் பெறுவதற்காகத் தற்பொழுது கட்சியில் தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.