இன்று அண்ணா நினைவுதின பேரணி... சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

 
கிண்டி கத்திபாரா பாலம் போக்குவரத்து மாற்றம் பந்த் வேலைநிறுத்தம் கடையடைப்பு சாலை

இன்று தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு தின பேரணியையொட்டி, சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகரக் காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ போா் நினைவுச் சின்னத்திலிருந்து நேப்பியா் பாலம் நோக்கிவரும் வாகனங்கள், காமராஜா் சாலை செல்ல அனுமதிக்காமல், கொடிமரச் சாலை வழியாக திருப்பி விடப்படும். கலங்கரை விளக்கத்திலிருந்து காமராஜா் சாலை நோக்கிவரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பின்னா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

அறிஞர் அண்ணா

பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலிருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளா் சிலை செல்ல அனுமதிக்கப்படாது. வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாகச் செல்லலாம்.

அறிஞர் அண்ணா

அமைதி ஊா்வலம் வாலாஜா சாலையிலிருந்து வரும்போது, வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து பெரியாா் சிலை நோக்கித் திருப்பி விடப்படும். இதனால், காலை நேரத்தில் அண்ணா சாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை மற்றும் காமராஜா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்தச் சாலைகளை தவிா்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web