டிகிரி தேர்வானவங்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் அண்ணா யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு... கடைசி தேதி பிப்ரவரி 12!

 
அண்ணா பல்கலை கழகம்

இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ.30,000 மாத சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கு. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு தேர்ச்சியடைந்த, தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் Software Analyst, Programmer Analyst, Clerical Assistant  ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  

 வேலை வாய்ப்பு
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர்:Software Analyst, Programmer Analyst, Clerical Assistant
பணியிடங்கள்  : 6
விண்ணப்பிக்க கடைசி தேதி:12.02.2024, 19.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:
 
Software Analyst – 01 பணியிடம்
Programmer Analyst – 03 பணியிடங்கள்
Clerical Assistant – 02 பணியிடங்கள்

அண்ணா பல்கலைக்கழக கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Com, B.Sc, BCA, BE, B.Tech, MCA, M.Sc பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
 புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?
Anna University சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதச்சம்பளம் தகவல்கள்
Software Analyst – ரூ.30,000/-  

Programmer Analyst – ரூ.25,000/-  

Clerical Assistant – ரூ.629/-  
தேர்வு முறை  : நேர்முகத் தேர்வு 
 
Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 12.02.2024 அன்றுக்குள் https://cesannauniv.in/appln_tech.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
 விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web