இன்று சேலம், ஈரோடு உட்பட 6 தொகுதிகளில் அண்ணாமலை ‘சூறாவளி’ பிரசாரம்!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்துக் களமிறங்கியுள்ள பா.ஜ.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் அண்ணாமலை, நாளை ஒரே நாளில் 6 தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இன்று ஏப்ரல் 13ம் தேதி, திங்கட்கிழமை அண்ணாமலை தனது பிரசாரப் பயணத்தை மேற்கு மாவட்டங்களில் இருந்து தொடங்குகிறார். ராசிபுரம், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 6 முக்கியத் தொகுதிகளில் அவர் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். காலை முதல் இரவு வரை இடைவிடாது இந்தத் தேர்தல் பிரசாரம் திட்டமிடப்பட்டுள்ளது.

தன்னுடைய பிரசாரம் குறித்து அண்ணாமலை தனது ‘X’ பக்கத்தில், "தமிழகத்தில் கடந்த காலங்களில் நிலவி வரும் திமுக ஆட்சியின் ஊழல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி போட்டியிடும் NDA வேட்பாளர்களுக்குப் பொதுமக்கள் திரளாக வந்து ஆதரவளிக்க வேண்டும்."

இந்தத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்றாலும், மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.விற்கு இருக்கும் செல்வாக்கை வாக்குகளாக மாற்ற அவர் தீவிரமாக உழைத்து வருகிறார். நாளை நடைபெற உள்ள இந்தப் பிரசாரக் கூட்டங்களில் கூட்டணிக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
