“சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பா?”: தவெக நிர்வாகி விவகாரத்தில் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்!

 
ஸ்ரீவைகுண்டம் தவெக ஸ்ரீவைகுண்டம் தவெக
ஸ்ரீவைகுண்டம் தவெக 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கணவரை இழந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின்  முன்னாள் நிர்வாகி வேம்புலி விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான நபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக 'வி த லீடர்ஸ்'  அமைப்பின் நிறுவனரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கும், தற்போது மாநிலத்தில் நிலவும் உண்மை நிலவரத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக இருக்கும் இந்தத் தற்போதைய சூழல் பெண்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அ

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள், தற்போதைய தவெக ஆட்சியிலும் எவ்வித மாற்றமும் இன்றித் தொடர்வதாக அண்ணாமலை தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

சமூக விரோதச் செயல்களிலும், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் ஈடுபடும் நபர்களுக்கு, அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் அடையாளம் ஒருபோதும் பாதுகாப்புக் கேடயமாக மாறிவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறை எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல், சட்டப்படி மிகக் கடுமையான நடவடிகைகளை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.