பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்... பெரும் பரபரப்பு!
தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகி, 'பாரத மக்கள் கழகம்' என்ற பெயரில் தனியாகப் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாகப் பல்வேறு சமூக வலைத்தளங்களில் சில புதிய தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் செய்தி தற்பொழுது அரசியல் வட்டாரங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் சிலர் கோயில் கோபுரம் மற்றும் வேல் சின்னம் பொறிக்கப்பட்ட புதிய கொடி ஒன்றின் பட இணையப் பக்கங்களில் பகிர்ந்து வருவது இந்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

வழக்கமாகச் சமூக ஊடகங்களில் எழும் பல்வேறு செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதில் அளித்து மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவராக அண்ணாமலை இருந்து வருகிறார். ஆனால், தற்பொழுது பரவி வரும் இந்த புதிய கட்சி குறித்த புகார்கள் மற்றும் தகவல்கள் பற்றி அவர் இதுவரை எந்தவொரு பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். அவரது இந்தத் தொடர் மௌனம் பாஜகவின் டெல்லி மற்றும் தமிழகத் தலைமை நிர்வாகிகளிடையே பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் வேளையில், அண்ணாமலையின் இந்த மௌனம் அரசியல் வட்டாரங்களில் பலவிதமான ஊகங்களை எழுப்பியுள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்தோ அல்லது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புதிய கொடி விபரம் குறித்தோ அண்ணாமலை தரப்பிலிருந்தோ அல்லது பாஜக தலைமையிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை
