திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் புதிய கட்டுப்பாடு - பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்!

 
திருவண்ணாமலை கோவில் மருத்துவ பரிசோதனை

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகக் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், கருவறை அபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இனி உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்

கோவில் கருவறை மிகவும் குறுகலாக இருப்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கருவறை அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அபிஷேகம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், அபிஷேகம் காணும் பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ORS கரைசல் வழங்கவும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.