தீபாவளிக்கு `அண்ணாத்த’ ரிலீஸ்!அமெரிக்காவில் பேட்ஜ் வொர்க்!

 
தீபாவளிக்கு `அண்ணாத்த’ ரிலீஸ்!அமெரிக்காவில் பேட்ஜ் வொர்க்!

தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இவரின் அடுத்த படம் அண்ணாத்த ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தீபாவளிக்கு `அண்ணாத்த’ ரிலீஸ்!அமெரிக்காவில் பேட்ஜ் வொர்க்!


தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு `அண்ணாத்த’ ரிலீஸ்!அமெரிக்காவில் பேட்ஜ் வொர்க்!


குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு என நட்சத்திரப் பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளி அன்று நவம்பர் 4 ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

From around the web