1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம்!

 
தேர்வு

தமிழகம் முழுவதும்  1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2 முதல் 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை   பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தேர்வு

அட்டவணை

தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி முதல்  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “ இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  தமிழகத்தில்  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும்  .

விடுமுறை

13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  ஆசிரியர்கள் 19.04.2024 ம் தேதி  நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல்   பயிற்சிகள் அளிக்கப்படும்.  
மேலும், 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.   26.04.2024   இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web