பகீர் வீடியோ... மகா கும்பமேளாவில் மீண்டும் தீவிபத்து…. தீயில் கருகிய கார்கள்!

 
கும்பமேளா தீவிபத்து

உத்திரப்பிரதேச மாநிலத்தில்   பிரக்யராஜ் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடபாண்டிலும் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக  நடைபெற்று வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர்.  

இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் செக்டார் 19 பகுதியில் சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 18 கூடாரங்கள் எரிந்து சேதமாகி பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.  இந்நிலையில் இன்று அதிகாலையும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கும்பமேளா தீவிபத்து

அதாவது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் திடீரென தீ பரவியது. 2 கார்களும் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து சேதமான நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web