சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து... தொடரும் சோகம்!

 
பட்டாசு ஆலை
 

சிவகாசியில் சில நாட்களுக்கு முன் பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்தால் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திரும்பும் திசையெல்லாம் வானுயர்ந்த புகை, மரண ஓலம் , கதறி அழும் கூக்குரல் கேட்ட நிலையில் அதன் சுவடு இன்னும் மறையவில்லை அதற்குள் சிவகாசியில் நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.  காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும்  பணிக்கு வராததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பட்டாசு விபத்து

மீதமிருந்த வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டதாக  விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இ அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதல் ரசாயனங்கள், தொழிலாளர்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வெண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உரிமைதாரர்கள் மற்றும் போர்மேன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

From around the web