தமிழகத்தில் மேலும் ஒரு சிறுமி மாயம்... ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது சிறுமியைத் தேடும் பணி தீவிரம்!

 
சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

விழுப்புரத்தில் சிறுமி காணாமல் போன அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சியாக மேலும் ஒரு சிறுமி மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி

கடந்த 16-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த 8 வயது சிறுமி, அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தாயாரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி அளித்த ‘பகீர்’ வாக்குமூலம்..!

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான மற்றொரு சிறுமியைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காமல் கடந்த 7 நாட்களாகத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.