சென்னையில் மீண்டும் ஒரு கொடூரம்... போதை வெறியில் 17 வயது மாணவி நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை!

 
சிறுமி பாலியல் பலாத்காரம்

சென்னையில் மனிதாபிமானமற்ற முறையில் 17 வயது மாணவியை அவருடைய நண்பர்களே போதை வெறியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை மவுலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் நட்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அந்த இளைஞர்கள் சிலர் கடுமையான போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தங்களின் நண்பர் என்றும் பாராமல், அந்த 17 வயது சிறுமியை மிரட்டி அசாத்தியமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை பலாத்காரம் கர்ப்பம் கர்ப்பிணி

இக்கொடூரச் சம்பவத்தால் உடல் மற்றும் மனதளவில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, அழுது கொண்டே தனது பெற்றோரிடம் விபரத்தைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகப் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொண்ட போரூர் பெண் போலீசார், உடனடியாகப் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு பொது மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்தச் சிறுமியின் 'நண்பர்கள்' என்று கூறப்படும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமி பாலியல்

சென்னையில் அடுத்தடுத்து மைனர் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறி வரும் இத்தகைய போக்சோ குற்றங்கள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறை இன்னும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.